டில்லி:
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை இன்று டில்லியில் சந்தித்து பேசினார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திடீரென டில்லி பறந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று காலை டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளார்.
Patrikai.com official YouTube Channel