சென்னை:

மிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மேலும்,  தமிழகத்துக்கு சாதகமான திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் 2வது நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அம்மா சட்டமன்றத் தில்  110-ன் கீழ் சென்னை மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கும் அடிப்படை யில் நெம்மேலியில் 150. மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். அந்த திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும்,  அம்மா அறிவித்த மற்றொரு திட்டம் பேரூரில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நடைமுறைப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த  இரு திட்டங்களும்  நிறைவேறும் போது சென்னை மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் கிடைக்கும் என்றவர்,  கடலோர மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆய்வு நடத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.

தமிழக வளர்ச்சிக்கு தேவையான நிதி ஒதுக்கும்படி  மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகவும்,  தற்போது வறட்சியால் தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முழு தண்ணீர் தட்டுப்பாட்டையும் நீக்க 200 கோடி ரூபாயும்,  கூடுதலாக 65 கோடி ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கவும்  அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்தவர்,  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் இரண்டு வாரத்திற்குள் கொண்டுவரப்படும் என்று கூறினார்.

தமிழகம் முழுவதும்  மழைநீர் சேகரிப்பை துரிதப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட இருப்பதாகவும்,  மழை பெய்தால் மட்டுமே நிலத்தடி நீர் உயரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் நீரை மீண்டும் சுத்திகரிக்க அரசு முயற்சித்து வருவதாகவும்,  புதிய தொழிற் சாலைகள் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் போது பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும், இவ்வாறு செய்தால் 50 சதவிகித நீர் மிச்சமாகும்  என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது என்று கூறிய முதல்வர்,  தமிழகத்துக்கு சாதகமான திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக அரசு  மாத வாரியாக  தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது என தெரிவித்த எடப்பாடி, . தமிழக அரசைப் பொறுத்தவரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு மாதாந்திரம் வழங்கப்படும் நீரைப் பெறுவதற்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

கர்நாடக அரசு குறிப்பிட்ட காலத்தில் பயிர் நடவு செய்ய மாதாந்திர அடிப்படையில் வழங்க வேண்டிய நீரை அவசியம் திறந்து விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. என்று கூறியவர், அதற்கு  அனுமதி வழங்கப்படவில்லை மத்திய அரசு தெளிவாக சொல்லி விட்டது என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக  உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது என்று கூறினார்.