சென்னை:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப்பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் கொரோனாவிற்கு ஆளான மக்கள் களப்பணியாளர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, செங்கல்பட்டு மருத்துவமனையில் டீன் சுகுமாரன் உள்ளிட்ட கொரோனாவால் உயிரிழந்த 28 முன் களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel