சென்னை: வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

பொதுவாக அரசு பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி உள்பட துறைவாரியான தேர்வுகள் நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால், இந்த பணியிங்கள் நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க உள்ளது.

அதன்படி,  வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.  இந்த காலி பணியிடங்களை,  மாவட்ட ஆட்சியரின் பொது நேர்முக உதவியாளரே விதிகளுக்கு உட்பட்டு இப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ளவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இதுகுறித்து  தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் , பார்வையில் காணும் கடிதத்தின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. வருவாய்த் துறையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மூன்று வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களே விதிகளுக்கு உட்பட்டு நிரப்பிடலாம் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டும். இதுவரை அக்காலிபணியிடங்களை நிரப்பிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே. மேற்காணும் காலிப்பணியிடங்களை நிரப்பிட. மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நிரப்பிட நடவடிக்கை மேற்கொண்டு. அதன் அறிக்கையினை அரசுக்கு அனுப்புமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]