சென்னை: தமிழ்நாட்டில் சில மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு பணிகளில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளை மாநில அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில், ஏற்கனவே பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டும் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேற மாநகராட்சி  மண்டல மற்றும் நகராட்சிகளின் ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி செந்தில் முருகன் திண்டுக்கல் மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையராக சந்திரன், நாமக்கல் மாநகராட்சி ஆணையராக சிவகுமார் ஆகியோர் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி துணை ஆணையராக சித்ரா, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையராக செல்வ பாலாஜி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணம்  மாநகராட்சி ஆணையராக காந்திராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிவகாசி மாநகராட்சி ஆணையராக சரவணன் ,  காரைக்குடி மாநிகராட்சி ஆணையராக நாராயணன் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர்  மாநகராட்சியின் துணை ஆணையராக மகேஸ்வரி, நெல்லை  மாநகராட்சி துணை ஆணையராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக நாராயணனை நியமிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.