நெட்டிசன்:

மூத்த செய்தியாளர் திருஞானம் (Thirugnanam Mylapore Perumal  ) அவர்களின் முகநூல் பதிவு:
தமிழக அரசுதான், எனது  மகள் அனிதாவை ‘கொலை’ செய்தது !

அனிதாவின் தற்கொலை நிகழ்வை,  மிகச்சரியாக தூரத்துப் பார்வையுடன் யூகித்து, நீதியரசர் கிருபாகரன், கடந்த மாதம் செப்டம்பர் 24ல், தீர்ப்பளித்தாரே….

மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில்…

” நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், விபரீத முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, அவர்களுக்கும் [ அனிதாக்களுக்கு ], பெற்றோருக்கும் ‘கவுன்சிலிங்’  [ உளவியல் ஆலோசனை ] அளிக்கவேண்டியது, அரசின் கடமை ஆகும்…” என்று, திட்டவட்டமாக தீர்ப்பு கொடுத்தார், எனது தூரத்து உறவினரான நீதியரசர் கிருபாகரன் !

இன்று, தினத்தந்தியில் கடம்பூர் இடையர்காட்டார் இதனை பதிவு செய்துள்ளார் !

தீர்ப்பு தெளிவாக இருந்தும்… நீட் தேர்வில் தவறிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்யாமல், தமிழக அரசு மெத்தனமாக இருந்து…

எனது  உறவுக்காரரான கூலி்த் தொழிலாளி அரியலூர் சண்முகத்தின் மகள் அனிதாவை, தற்கொலைக்கு தூண்டி, கொலை செய்துவிட்டது, தமிழக அரசு என்று, குற்றம் சாட்டுகிறேன் !

விவரமானவர்கள் வழக்கு தொடுத்தால், தமிழக அரசுக்கு சாட்டை அடி உறுதி !