சென்னை:
இரும்பு, சிமெண்ட், மருந்து, உரம் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக அரசு இன்று மாலை தெரிவித்திருந்த நிலையில், அந்த நிறுவனங்களுக்கு இயங்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக இரவில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இரும்பு, சிமெண்ட், சுத்திகரிப்பு. சர்க்கரை, காகிதம், ரசாயனம், ஜவுளித்துறை, உரம், உருக்கு, கண்ணாடி, ஃபவுண்டரி உட்பட 13 துறைகளை சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்தது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.