கோயமுத்தூர்: கோவையில் ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா  அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான கட்டுமானப் பணிக்கான டெண்டரை கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.

கோவையில் தங்க நகை பூங்கா அமைப்பக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறிய நிலையில்,   ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா  கட்டுமான பணிகளை மேற்கொள்ள சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. கோவை குறிச்சியில் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரஅடியில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது.

கோவை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், 2025, மே 20ந்தேதி அன்று கோவை சிட்கோ தொழிற்பேட்டையில், 126 கோடி ரூபாயில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என,  அறிவித்திருந்தார். இதன் ஒரு கட்டமாக, நகை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன்  தலைமையில்  கோவை கொடிசியாவில் நடத்தப்பட்டது.

குறிச்சியில், 2.46 ஏக்கரில், 8.5 லட்சம் சதுரடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும். நகைப்பட்டறை, 3டி பிரிண்டிங், லேசர் பிரிண்டிங், ஹால்மார்க் தர பரிசோதனை கூடம், பாதுகாப்பு பெட்டகம், கூட்டரங்கம், பயிற்சி மையம் என, பல்வேறு வசதிகள் அமையும் இதற்கான கோவையில் தங்க நகைப்பூங்கா அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தங்க நகை பூங்காவில் கட்டப்பட்ட உள்ள கட்டிடங்களுக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது. ரூ.45 கோடியில் தங்க நகை பூங்காவுக்கான கட்டுமான பணிகள்,   துவக்கியதும், 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  கோவையில் அமைக்கப்படும் இப்பூங்கா, இந்தியாவிலேயே மிகச்சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.