சென்னை: ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு டென்டர் கோரி உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 27ந்தேதி நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் விதி 110ன் கீழ் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அபபோது, ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்க பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி, தர்மபுரியில் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட வுள்ளது என கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன இதற்கேற்ப ஓசூரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஓசூரில் பிரம்மாண்ட தொழில் நகரை கட்டமைக்க டாடா குழுமம் முன்வந்து உள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பெங்களூரு மற்றும் ஓசூர் ஆகிய 2 நகரங்களுக்கு வர்த்தக ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் ஓசூருக்கு உள்ளேயும், வெளியேயும் 5 இடங்கள் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்னெடுப்புகளை இந்திய விமான நிலைய ஆணையம் மேற்கொண்டு வந்தது.
இதில் தனியார் ஏர்ஸ்ட்ரிப் நிறுவனமான டனேஜா ஏர்ஸ்பேஸ் மற்றும் ஏவியேஷன் லிமிடெட் இணைந்து தளங்கள் தொடர்பான ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் தேர்வு செய்யப்பட்ட 5 தளங்கள் தொடர்பான அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தளங்களையும் பார்வையிட்டதாகவும், ஒவ்வொரு தளத்தின் நன்மை தீமைகளுடன் கூடிய ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து விரைவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் பேச்சுவார்த்தை நடத்திருப்பதாகவும் அதில் 5 தளங்களில் இருந்து 2 தளங்களை ஆய்வு செய்து, பின்னர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதைத்தொடர்த்நது, ஒசூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆலோசகர்களின் ஆலோசனையின் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு தேர்வு செய்த ஓசுர் விமான நிலையத்துக்கான 5 இடங்கள் : ஆணையம் விரைவில் ஆய்வு