சென்னை: பள்ளி மாணவர்கள் விபூதி பொட்டு வைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக கூறி, மாணவ மாணவிகள் பொட்டு விபூசி பூச தடை வித்ததி ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை எழுந்துள்ளது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களை பொட்டு. விபூதி வைக்க கூடாது என்று தலைமை ஆசிரியை கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக அந்த பள்ளிக்கு வந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர், தலைமை ஆசிரியை உள்பட பள்ளி ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக கட்சியினர் இன்று தலைமை ஆசிரியை நேரில் சந்தித்து இது குறித்து விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இது அரசு ஆணையாக வெளியிட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தலைமை ஆசிரியையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாவிடம் முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன் தாசில்தார் முத்துச்சாமி விசாரணை நடத்தினர் ஆசிரியை மாணவர்கள் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசுருதீன் கூறுகையில், பள்ளி மாணவர்கள் பொட்டு வைக்கக் கூடாது என்று எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை. தலைமை ஆசிரியர் தவறுதலாகக் கூறியுள்ளார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.
ஏற்கனவே கிறிஸ்தவ பள்ளிகளில் இதுபோன்ற செயல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசு பள்ளி தலைமை ஆசிரியையின் செயல் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை அரசியல் கட்சிகள்தான் மக்களிடையே சாதி, மத, இன பாகுபாட்டை வளர்த்து, அரசியல் செய்து வந்த நிலையில், தற்போது கல்வி போதிக்கும் பள்ளிகளிலும், மதத்தை புகுத்த மாற்று மத ஆசிரியர்கள் முனைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செயலை திமுக அரசு முளையிலேயே கிள்ளி யெறியாவிட்டால், பெரும் பிரச்சினைக்குறியதாக மாறும் என்பதை மறுக்க முடியாது.