சென்னை: அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் 1000 மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டு படித்து வரும் 10ம் வகுப்பு பயிலும் 1000 மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆனால், இந்த உதவித்தொகை பெற அவர்கள் திறனாய்வு தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு, தமிழக கல்வித்துறையில் கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திட்டமான நான் முதல்வர் திட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்கள் மத்தியி புரட்சியை ஏற்படுத்திய திட்டத்தின்படி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் வடிவமைக்கும் வகையில் வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வரும் ஜனவரி 25ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணாக்கர்கள் (500மாணவர்கள், 500 மாணவியர்கள்) தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகையாக மாதம் ரூ. 1000 வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டு அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் 10ம் வகப்பு மாணாக்கர்கள் தேர்வில் பங்குபெறலாம். கணிதனம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களில் அடிப்படையில், கொள்குறி வகையில் இரு தாள்களாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும், முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்களும், இரண்டாம்தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்பான வினாக்களும் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்தாள் தேர்வானது காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாள் தாள் தேர்வு மாலை 2மணி முதல் 4மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பத்தை, மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, விண்ணப்பப் படிவத்தினை தரவிறக்கம் செய்து, நவ.30 முதல் டிச.9 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிசம்பர் 9ம் தேதிக்குள், மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மத்தியஅரசு இதுபோன்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய கல்வி வாரியத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, நவம்பர் மாதத்தில் நடைபெறும் தேசியதிறனாய்வு தேர்வு க்கு நடப்பு கல்வியாண்டில் அங்கிகாரம் பெற்ற பள்ளியில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . செப்டம்பர் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
பத்தாம் வகுப்பிற்க்கான தேசிய திறனாய்வு தேர்வில் எழுதும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பெற்றுகொள்ள கல்வித்துறை தேர்வி இயக்கத்தில் இருந்து நேரடியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். தேர்வு கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும் . விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் . கூடுதல் விவரங்களை தேர்வித்துறை இயக்கம் மூலம் அறிந்துகொள்ளலாம் .
t http://www.dge.tn.gov.in/ தேசியதிறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பத்துடன் ஏதேனும் விவரங்கள் அறிய இவ்விணையதளம் உதவிகரமாக இருக்கும் . தேசிய திறனாய்வு தேர்வானது என்சிஇஆர்டி என அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நடத்தும் தேர்வானது அறிவியல் தொடர்பான திறனாய்வு தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படுறது 1964 ஆம் வருடம் முதல் இத்தேர்வானது நடத்தப்பட்டு வருகின்றது.
எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.