சென்னை: வளை​குடா நாடு​களில் நிலவி வரும் போர் பதற்ற சூழலை கருத்​தில்​கொண்​டு, அங்​குள்ள தமிழர்​களின் அவசர உதவிக்​காக உதவி எண்​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​துள்​ளார்.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துபாய், ஷார்ஜா போன்ற முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். இதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, வங்காள நடிகை சுபாஸ்ரீ கங்குலி உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவர்.

பிரிட்டனில் நடைபெறவுள்ள ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்ற பி.வி. சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகிலேயே ஏவுகணை தாக்குதல் நடந்ததாகவும், இதனால் நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக இருப்பதாகவும் சிந்து தனது சமூக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல், தனது மகனுடன் துபாயில் சிக்கியுள்ள நடிகை சுபாஸ்ரீ கங்குலி, தாங்கள் தங்கியிருக்கும் பாம் ஜுமேரா ஹோட்டலுக்கு அருகிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தெரிவித்துள்ளார்.

புனேவைச் சேர்ந்த 84 எம்பிஏ மாணவர்களும் கல்விச் சுற்றுலாவுக்காகச் சென்று தற்போது நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். ஷார்ஜா விமான நிலையத்தில் சிக்கியுள்ள பலர், கையில் போதிய பணமோ அல்லது அத்தியாவசிய மருந்துகளோ இல்லாமல் தவிப்பதாக மத்திய அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், வான்வெளிப் போக்குவரத்து சீரானதும் இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ளவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்ணைகளை அறிவித்து உள்ளது.

இது தொடர்​பாக முதல்வர் ஸ்டாலின் வெளி​யிட்ட சமூக வலைதள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் நாடு​களுக்கு இடையே ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, ஈரான் மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள ஐக்​கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபி​யா, கத்​தார் உள்​ளிட்ட வளை​குடாநாடு​களில் பதற்​ற​மான சூழ்​நிலை நில​வு​கிறது.

அங்​குள்ள இந்​தி​யர்​களின் பாது​காப்பு கரு​தி, தேவையற்ற பயணங்​களைத் தவிர்க்​க​வும், இந்​திய தூதரகம் வழங்​கும் அறி​வுறுத்​தல்​களை முறை​யாக பின்​பற்றி வீடு​களி​லேயே பாது​காப்​பாக இருக்​கு​மாறும் இந்​திய அரசு கேட்டு கொண்​டுள்​ளது.

தமிழக முதல்​வர் என்ற முறை​யில், வளை​குடா நாடு​களில் வசித்து வரும் நம் தமிழர்​களின் பாது​காப்பு குறித்து மிகுந்த கவலை அடைந்​துள்​ளேன். அவர்​களின் நிலை​மையை உடனுக்​குடன் கண்​காணித்​து, அவர்​களுக்கு தேவை​யான உதவி​களை வழங்க அயலக தமிழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறைக்கு உரிய அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அங்​குள்ள தமிழர்​களுக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் வழங்க தமிழக அரசு தயார் நிலை​யில் உள்​ளது.

இதற்​காக டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தில் பிரத்​யேகக் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டு, நிலைமை தீவிர​மாக கண்​காணிக்​கப்​பட்டு வரு​கிறது.

பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் உள்ள தமிழர்​கள் அல்​லது தமிழகத்​தில் உள்ள அவர்​களது குடும்​பத்​தினர் ஏதேனும் அவசர உதவி தேவைப்​பட்​டால், தமிழக அரசின் 24 மணி நேர கட்​ட​ணமில்லா உதவி எண்​களைத் தொடர்பு கொள்​ளலாம்.

அதன்​படி, இந்​தி​யா​வுக்​குள் இருப்​பவர்​கள் 1800 309 3793 என்ற எண்​ணை​யும், வெளி​நாடு​களில் இருப்​பவர்​கள் +91 80 6900 9900 மற்​றும் +91 80 6900 9901 ஆகிய எண்​களை​யும் தொடர்பு கொள்​ளலாம். மேலும், டெல்லி கட்​டுப்​பாட்டு அறையை 011-24193300 மற்​றும் 92895 16712 (வாட்​ஸ்​-அப்) ஆகிய எண்​கள் மூலம் தொடர்பு கொள்ள வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

[youtube-feed feed=1]