சென்னை: நெல் குவிண்டாலுக்கு விலை அதிகரிப்பு என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஏமாற்று நாடகம்  என கடுமையாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விவசாயிகளை ஏமாற்றுவதை கைவிட்டு ஒடிசா அரசை பின்பற்றி உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு நெல் குவிண்டால் 1 க்கு ரூ 3100/- வழங்கிட வலியுறுத்தி உள்ளார்.

நிகாழண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) ரூ. 143 உயா்த்தி, குவிண்டால் நெல் ரூ. 2,183-க்கு கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக நெல் கொள்முதல் விலை அதிகபட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. 2018-19-ஆம் ஆண்டில் குவிண்டாலுக்கு ரூ.200 உயா்த்தப்பட்டிருந்தது. இதற்கான அறிவிப்பு ஜூன் 8ந்தேதி வெளியானது.

இதையடுத்து, தமிழ்நாட்டிலும்,  நெல் கொள்முதல் குறித்த முதலமைச்சர் ஸ்டாலின், துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு கடந்த கடந்த இரு நாட்களுக்கு முன்பு (ஜூன் 26ந்தேதி) அறிவிப்பு வெளியிட்டது. அதில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி  நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட  நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மேற்கொள்ள மத்திய அரசை, இவ்வரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க  மத்தி அரசு தமிழ்நாட்டில் காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300என்றும், சன்னரக  நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320 என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில்  நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405, சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்து வரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3 ஆண்டு காலமாக தொடர்ந்து வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வந்த நிலையில் வழங்க மறுத்து ஏமாற்றி விட்டார்கள். சென்ற ஆண்டு முதல் விவசாய உற்பத்தி செலவு கூடுதல் ஆகிவிட்டதால்௹ 3500/- வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசு ஆண்டுதோறும் குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாயை உயர்த்தி சடங்கு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக 2014 மோடி அரசு பொறுப்பு ஏற்புக்கு முன் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 1200/- வழங்கப்பட்டதாகவும், எனது ஆட்சி பொறுப்பு ஏற்று பத்தாண்டு காலத்தில் ரூ2400 ஆக உயர்த்தி இரட்டிப்பு விலை வழங்கி உள்ளதாக சொல்லி ஏமாற்றி இருக்கிறார். அவர் ஆட்சி பொறுப்பு ஏற்பதற்கு முன் உற்பத்தி செலவு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் ஆக இருந்தது. தற்போது இடு பொருட்கள் விலை பல மடங்காக உயர்ந்து உற்பத்தி சிலவு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 45 ஆயிரம் உயர்ந்துள்ளது.

மத்திய அரசு தற்போது ரூ 2400 உயர்த்தி உள்ள நிலையில் ஊக்கத்தொகையாக தமிழ்நாடு அரசு ரூ 100 உயர்த்தி வழங்குவதை பின்பற்றி நடப்பாண்டு ரூ 2500 வழங்கி உள்ளதாக தன்னை தானே பாராட்டிக் கொள்கிற நிலை ஏற்பட்டிருப்பது எண்ணி வேதனை அடைகிறோம்.

2018 முதல் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மாநிலங்கள் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500-/- வழங்கி ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் விலையோடு சேர்த்து உயர்த்தி வழங்கி வருகிறார்கள். தற்போது ஒடிசாவில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு நெல் குவிண்டால் 1க்கு ரூபாய் 3100 விலை நிர்ணயம் செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.இதனை வண்மையாக கண்டிக்கிறோம். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விவசாயிகளை ஏமாற்றுவதை கைவிட்டு ஒடிசா அரசை பின்பற்றி உற்பத்தி செலவை கணக்கில் கொண்டு நெல் குவிண்டால் 1க்கு ரூ 3100/- வழங்கிட வலியுறுத்து கிறேன்” 

இவ்வாறு பேசினார்.