சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் அதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள், வரும் 5ந்தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது.  இதுதொடர்பாக பலமுறை இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவொரு முடிவும் எட்டப்பட வில்லை. மேலும் தமிழ்நாடு அரசு எப்போதும் போல மத்தியஅரசுக்கம் கடிதம் எழுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இநத் நிலையில்,  ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  400க்கும் மேற்பட்ட நாட்டுப்படகில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.  இவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 24 பேரையும், 4 விசைப்படகுகளை இலங்கை கடற்படை சிறை பிடித்தது.

இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடவுள்ளனர். இதைத்தொடர்ந்து,   ஜூலை 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.