சென்னை:
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறைக்கான கொள்ளை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவரம் வெளியிடப்படாத நிலையில், தற்போது கொள்ளை விளக்க குறிப்பில், கடந்த பிப்ரவரி 16 அன்று இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எதிர்க்கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.