தமிழக அரசு பள்ளி மாணவர்களுடன் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்றுள்ள தமிழ் நாடு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் துபாய் நூலகத்திற்கு தமிழக அரசு சார்பாக 1000 நூல்களை வழங்கினார்.

அண்ணா, அப்துல் கலாம், வள்ளலார் குறித்த நூலகள் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை அங்குள்ள ஷேக் முகமது பின் ரஷீத் நூலகத்தில் இன்று ஒப்படைத்தார்.

பின்னர் மாணவர்களுடன் குழந்தைகள் தின உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.

நான்கு நாள் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள ஷார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் முக்கிய இடங்களை அமைச்சர் அன்பில் மகேசுடன் சென்று சுற்றிபார்த்த மாணவர்கள் இன்றிரவு சென்னை திரும்புகின்றனர்.