சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பபட்டு உள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி முதல் மீண்டும் வகுப்புகளை நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருவதால், அதை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இருந்தாலும் இறுதியாண்டு பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மட்டும் கல்விநிலையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது தேர்தலையொட்டி விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தல் முடிந்ததும், வரும் அனைத்து பள்ளிகளிலும் 8ம் தேதி முதல், மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன் மாணவர்களுக்கு ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.