டெல்லி:
கொரோனா பாதிப்பில் 90%  தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில்தான் உள்ளது என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதுபோல உயிரிழப்பும் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மொத்த இறப்பு 86 சதவிகிதம் என்று  கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8 லட்சத்தை ( 7,93,802) நெருங்கி உள்ளது. ல கடந்த 24 மணி நேரத்தில்  மேலும்   475 போ் உயிரிழந்தனா். இதனால் கொரேனாவால் பலியானோர்  எண்ணிக்கை 21,604  -ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் தொற்று காரணமாக 2,76,685 பேர்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,    4,95,513 பேர் குணமடைந்து  இருப்பதாகவும், மகாராஷ்டிரா மாநிலம் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும்,  கொரோனா பாதிப்பில் 90 சதவிகிதம் தமிழகம் டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் இருப்பதாக புள்ளி விவரப் பட்டியலை தெரிவித்து உள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள 49 மாவட்டங்களில் மட்டும் 80 சதவிகித தொற்று இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
அதுபோல நாடு முழுவதும் கொரோனா உயிரிழப்பில் 86 சதவிகிதம்,  தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்,  உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ளதாகவும் கூறியுள்ளது.