நெட்டிசன் பகுதி:
“குவைத் தமிழ்ப் பசங்க” முகநூல் பக்கத்தில் இருந்து..
குவைத்தில் சபா அல் நாசர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்தவர், ஏழுமலை. தமிழகம் விழுப்புரம் மாவட்டம், புதூர் பாக்கத்தைச் சேர்ந்தவர்.
இவர் கடந்த ஆறாம் தேதி, குவைத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் சொந்த ஊரான புதூர் பாக்கத்தில் வசிக்கிறார்கள். மிகுந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள், ஏழுமலையின் உடலை தாயகம் அனுப்பி வைக்க கோரினார்கள்.
இதையடுத்து ஏழுமலையின் நண்பர் அன்பழகன் சமூக ஆர்வலர் ஆல்வின் உதவியை நாடினார். அவரது மற்றும் ஏழுமலையின் நண்பர்கள் முயற்சியில் சட்ட நடவடிக்கை அனைத்து முடிந்து இந்திய தூதரக அதிகாரிகள் அனுமதியுடன் நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் மூலம் ஏழுமலையின் உடல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது.
உவைசி மக்கள் நல பேரவை AIMIM குவைத் மண்டல துணை தலைவர் மெளலவி பைசூர் ரஹ்மான் மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் மஜீத் மற்றும் நெல்லை பீர் மரைக்காயர்(சமுக ஆர்வலர்), ஆல்வின் (சமூக ஆர்வலர் ), நண்பன் சுதன், ஏழுமலையின் நண்பர் அன்பழகன் மற்றும் ஏழுமலையின் ஊரைச் சேர்ந்த உறவினர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.
கண்காணாத தேசத்தில் உயிரிழந்த தமிழக உறவை, அவரது குடும்பத்தாரின் விருப்பத்தன் பேரில் தாயகத்துக்கு அனுப்பி வைத்த நண்பர்கள் நெகிழ வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகள்.
நெல்லை பீர் மரைக்காயர் (சமுக ஆர்வலர்),