சென்னை:
தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. விபத்தில் உயிர் இழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் விவரம் இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை. ஆனாலும் தமிழக பயணிகள் அதிகளவில் பயணித்து இருப்பதால் அவர்களை மீட்க ஒடிசா அரசுடன் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு உதவவும் அவர்களை மீட்டு சென்னை அழைத்து வரவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.