சென்னை: தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் நேற்று காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் டிவிட் மூலம் உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், சற்று உடல் சோர்வு இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன்.’ என பதிவிட்டுள்ளார்.