சென்னை:
சென்னையில் வசிக்கும் மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை கண்டறிவதற்காக சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட செரோசர்வே, நகரத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
செரோசர்வேயால் ஜூலை மாதம் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பை விட தற்போது கொரோனா பரவல் அதிகமாகியுள்ளது.
செரோசர்வே சார்பில் 6,389 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன, இதில் 2,062 பெயருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. அதாவது சென்னையின் மொத்த மக்கள் தொகையில் 32.3% பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, என்று சென்னை மாநகராட்சி ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் இரவு 10 மணி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், இது பொருளாதார மீட்சிக்கு வசதியாக இருக்கும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெரிவித்துள்ளார், மேலும் கொரோணா பரவுவதை தடுப்பதற்கான அனைத்து விதிமுறைகளையும் கட்டாயம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.