சென்னை: ஜனவரி 19ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்  நடைபெறும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு மாநில  காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு சில முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் தேர்தல்களை எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுடனான உறவு மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.  அத்துடன்,  மாநிலம் தழுவிய அளவில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் போராட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]