சென்னை: மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.
திமுக கூட்ணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, இந்த முறையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலைப்போலவே தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பாளர்கள் யார் என்பதை கட்சியின் டெல்லி தலைமைக்கு மாநில தலைமை அறிவித்து உள்ளது. அங்கு ஒப்புதல் கிடைத்தவுடன் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தை தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட தேனி தொகுதியில் திமுகவும், திருச்சியில் மதிமுகவும் போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் விவரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- சிவகங்கை
- திருநெல்வேலி
- கிருஷ்ணகிரி
- கரூர்
- விருதுநகர்
- கன்னியாகுமரி
- திருவள்ளூர்(தனி)
- புதுச்சேரி