சென்னை:
தமிழகஅரசின் தலைமை செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், சோதனை அதிகம் நடத்துவதால், பாதிப்பு அதிகம் தெரிவதாக மாநில அரசு கூறி வருகிறது.
சமீப நாட்களாக தமிழகத்தில் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.
சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகத்தின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் கிண்டி கிங் ஆய்வக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது.