சென்னை:
தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த உள்ளது.
தமிழகத்தின் நிதித்துறை செயலராக இருந்து வந்த கே. சண்முகம், கடந்தஆண்டு (2019) ஜூன் 29ந்தேதி அன்று தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு, ஜூலை 1ந்தேதி பதவி ஏற்றார். இவர் தமிழகத்தின் 46வது தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
சேலம் அருகே உள்ள வாழப்பாடியை சேர்ந்தவரான கே.சண்முகத்தின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடையும் நிலையில், அவரது பதவி காலத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து, மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, கே.சண்முகம், ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் 31ந்தேதி வரை பணி நீட்டிப்பு பெறுகிறார்.