சென்னை: தமிழ்நாடு முந்திரி வாரியம் என தனி வாரியம் உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன் தலைவராக வேளாண்துறை அமைச்சர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏற்கனவே வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி, தமிழ்நாடு முந்திரி வாரியம் எனும் தனி வாரியம் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளிட்டுள்ளார்.
முந்திரி சாகுபடி தொழிலாளர்கள் நலனுக்காகவும், முந்திரி சாகுபடி பரப்பு, உற்பத்தியை மேலும் அதிகரிக்க தமிழ்நாடு அரசு முந்திரி வாரியத்தை அரசுஉருவாக்கி உள்ளதாக கூறிய அமைச்சர், இதற்கு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளரை தலைவராக கொண்டு நிர்வாகக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. கடலூரை தலைமையிடமாக கொண்டு முந்திரி வாரியத்துக்கு தலைவராக உழவர் நலத்துறை அமைச்சர் செயல்படுவார் என்றும் கூறினார்.
