சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் (செப்டம்பரில்) தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளதாக அறிவித்து உள்ளார். அதன்படி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அவர் செல்ல இருக்கிறார். அதன்படி ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அவர் செல்ல இருக்கிறார். இந்த நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
. சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்கின்றனர். இதில், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், புதிய தொழில் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அனுமதி, ஆணவ படுகொலையை தடுப்பதற்கான புதிய சட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.