சென்னை; மார்ச் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என கூறினார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்  விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில்,  மார்ச் 9ந்தேரித தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கேபினட் கூட்டத்தில், இந்த ஆண்டு, பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்களுக்கும்,  மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என்றும்,  நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.