சென்னை: பிப்ரவரி 23ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் பிப்.23ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.23 மாலை 6.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற பிப்.17ம் தேதி தொடங்குகிறது. அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 23ந்தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]