சென்னை:
248 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை தமிழக அரசே நேரடியாக சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்திலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 293 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நிலையில், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 90% நிரம்பியது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன் நிரப்புவதற்கான 248 காலி சிலிண்டர்களை சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது தமிழக சிப்காட். இந்திய விமானப்படை விமானம் மூலம் 248 காலி சிலிண்டர்களும் இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.