சென்னை,

மிழக அரசின் நிதிநிலை அறிக்கை, நிதி அமைச்சர் ஜெயக்குமாரால் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு,

  • பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி
  • பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு  ரூ.988 கோடி நிதி
  • உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.
  • கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • 2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.
  • உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.
  • பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு
  • 2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்
  • குறைந்த நீரில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கு ஊக்குவிக்கப்படும்.
  • பழங்குடியினர் துறைக்கு ரூ.265 கோடி
  • நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடி
  • காவல்துறை வீட்டு வசதிக்கு ரூ.450 கோடி
  • 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
    தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
  • ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
  • இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
  • அகதிகள் நலனுக்கு ரூ.116 கோடி.
  • ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
  • இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
  • மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
  • சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
  • சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
  • காவல்துறைக்கு ரூ 6,483 கோடி
  • உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
  • மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
  • கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
  • நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
  • தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
  • தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
  • கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி