சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிபட்ஜெட்டில், தமிழக பட்ஜெட் 2024-25: மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவசப் பேருந்து திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
மகளிர் இலவச பேருந்து பயணம் திட்டம் மலைப்பகுதிகளான நீலகிரி, கொடைக்கான்ல் மற்றும் வால்பறை போன்ற பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்கு ரூ.843 கோடி ஒதுக்கீடு.
இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் மருத்துவ செலவுத்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.