சென்னை: தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
“முக்கிய இடங்களில் இலவச wi-fi சேவை” வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை, தாம்பரம், ஆவடி,கோவை,மதுரை, திருச்சி,சேலம் ஆகிய 7 மாநகராட்சிகளின் முக்கிய இடங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறைக்கு 8,056 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு. 500 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.
பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு-
பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு- தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
தூய்மை பணிகளுக்கு நவீன இயந்திரம் வாங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும். இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர் நல விடுதிகள் ரூ.100 கோடியில் கட்டப்படும். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ரூ.3,517 கோடி நிதி ஒதுக்கீடு.
அயோத்தி தாசர் பண்டிதர் பெயரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு அமைக்க ரூ.3,511 கோடி நிதி ஒதுக்கீடு.
வடசென்னை மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு.
217 செயற்கை பவள பாறைகள் அமைக்கப்படும்.
மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி வட்டாரத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும்.
10,000 கிலோமீட்டர் ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும்.