சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்2022-23ஐ நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார். அதில், தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 4.61% இருந்து 3.80% ஆக குறைய வாய்ப்பு உள்ளதாக கூறியவர், பெரியாரின் சிந்தனைகளை வெளியிட ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறினார்.
பட்ஜெட் உரையின்போது பேசிய நிதியமைச்சர், வரும் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61% இருந்து 3.80% ஆக குறைய வாய்ப்புள்ளது. எஅந்த வகையில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது
மேலும் வரும் நிதியாண்டில் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை இருக்கும்”, உக்ரைன் மீதான ரஷ்ய போர் காரணமாக உலகளவில் பொருளாதார மீட்டெடுப்பு தடைபட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
15-வது நிதி குழுவின் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் 20,000 கோடி வரை நிதி இழப்பை தமிழக அரசு சந்திக்க நேரிடும் முறையான நிதி பகிர்வை ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை என்று நிதியமைச்சர் கூறினார்.