சென்னை: சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இனவாத வெறுப்பு அச்சுறுத்தலைச் சமாளிக்க காவல் துறையில் புதிய பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இனவாத வெறுப்பு அச்சுறுத்தலைச் சமாளிக்க காவல் துறையின் புதிய சமூக ஊடக கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட உள்ளது.

மூக ஊடகங்களில் குற்றச்செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சமூக ஊடகங்களில் தவறான பதிவுகளை தடுக்க, சமூக ஊடக சிறப்பு மையம் அமைக்கப்படும்.

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

சென்னை அருகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும். சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்

பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கொற்கையில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்

திராவிட இயக்கம் சமூகநீதிக்கான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அது இன்னும் முழுமையாக முடியவில்லை.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் அச்சிடப்படும். அதற்காக  5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் புதிய அருங்காட்சியகம் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதது.

அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்ககீடு

தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும். தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு மீண்டும் உறுதியாகியுள்ளது.

விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடியில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்கப்படும்

அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நவீன நுட்பத்தில் நிலங்களை அளவீடும் செய்யும் வகையில், ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு

வானிலையை நவீன நுட்பத்துடன் துல்லியமாக கணிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு

சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு

நீர்வளங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, ரூ.3,384 கோடி நிதி ஒதுக்கீடு

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.