சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பொதுநிதி நிலை அறிக்கையில்,புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாத நிலையில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துஅறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, வரும் நிதியாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட மேலும் 500 மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.