சென்னை:
நாட்டிலேயே அதிகப்பட்ச கொரோனா தொற்று சோதனை தமிழகத்தில்தான் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 10லட்சம் பேருக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா சோதனையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 7 4,622 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 41,357 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் தமிழக மதருத்துவமனையில் 32,305 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,622
இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,675 பேர்
தமிழகத்தில் இதுவரை 10லட்சத்து 42ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.42% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 47 அரசு மற்றும் 42 தனியார் மையங்கள் என மொத்தம் 88 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 32,305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 33,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனோவால் பாதித்தவர்களில் 2,211 பேர் ஆண்கள், 1,434 பேர் பெண்கள் 12 வயதுக்குட்பட்ட 3,633 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
13 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட 62,105 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 8,884 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.