சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 2வது வாரத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள் குழு தமிழ்நாடு வருகை தந்து,தேர்தல் குறித்து ஆய்வு நடத்தியதுடன், தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், அடுத்த வாரம் தேர்தல் தேதி வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
சட்டமன்ற தேர்தலை எப்படி நடத்துவது, தேர்தல் நடவடிக்கைள், பாதுகாப்பு பணிகள், வாக்கு எண்ணிகை, வாக்குச்சாவடி பாதுகாப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து தேர்தல் அதிகாரிகள், ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.. அதன்படி தமிழ்நாட்டிலும் ஆய்வுகள் நடைபெற்றது. மேலும் தமிழக அரசியல் கட்சியினரின் கருத்துக்களும் பெறப்பட்டன.
இதைததொடர்ந்து, தமிழ்நாடு உள்பட நடைபெற உள்ள 5 மாநில தேர்தலை கண்காணிக்க 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 497 செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத்தொடந்து, தமிழநாடு உள்பட 5 மாநில தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் கடைசி கட்டமாக தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என தெரிகிறது..
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் 2வது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் தனது குழுவுடன் வரும் 5ம் தேதி கேரளா சென்று 3 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் 9, 10ஆம் தேதிகளில் மேற்கு வங்காளம் சென்று சட்டமன்றத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்கின்றனர். பத்தாம் தேதிக்கு பின்பு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]