சென்னை: 

மிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5,970 வழக்கறிஞர்களை பார் கவுன்சில்  இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கறிஞர்கள் தொழிலுக்கு படிப்பவர்கள் தங்களது படிப்பு முடிந்ததும், பார் கவுன்சிலில் மெம்பராக இணைவதை பெருமையாக நினைத்து, விழாவாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், அவர்கள் பார் கவுன்சில் விதிப்படி, அதற்குறிய சந்தாவை சரியாக செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞர்கள் சேமநல நிதி செலுத்த வேண்டும் என்பது கட்டாயம்.  ஆனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள்  5,970 பேர் தங்களது சந்தா தொகையை செலுத்தவில்லை என்று கூறி,  அவர் களை  இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சந்தா செலுத்தும் வரை நீதிமன்றங்களில் ஆஜராக கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.