மும்பை
நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற மும்பை தமிழர் கேப்டன் தமிழ் செல்வன் மூன்றாம் முறையாக எல் ஏல் ஆகி உள்ளார்.
நவம்பர் 20 ஆம் தேதி அன்றி288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரேகட்டமாக நவ.20ம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஆளும், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.
நேற்று அறிவிக்கபட்ட தேர்தல் முடிவுகளின்படி மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இங்கு பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது
தமிழர்கள் அதிகம் வசிக்கும் சியோன் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக கேப்டன் தமிழ்செல்வனும், காங்கிரஸ் வேட்பாளராக கணேஷ் குமார் யாதவும் போட்டியிட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த தமிழர் கேப்டன் தமிழ்ச்செல்வன். மொத்தம் 73,429 வாக்குகளையும், கணேஷ் 65,534 வாக்குகளையும் பெற்றனர். இதன் மூலம், கேப்டன் தமிழ்ச்செல்வன் 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்