கோரக்பூர்
உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் தமிழ் ஐஏஎஸ் அகிதாரியான விஜயேந்திர பாண்டியனை ஆட்சியாளராக முதல்வர் யோகி நியமித்துள்ளார்.
உத்திரப் பிரதேசத்தில் முதல்வர் யோகியின் சொந்த ஊரான கோரக்பூரிலும் துணை முதல்வர் கேசவ் பிரசாத்தின் புல்பூரிலும் நடந்த பாராளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. இதனால் முதல்வர் யோகி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை ஒட்டி மாநிலம் எங்கும் 37 ஐஏஎஸ் அதிகார்கள் இடம் மாற்றாம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வகையில் தனது சொந்த மாவட்டமான கோரக்பூரில் கே விஜயேந்திர பாண்டியனை ஆட்சியாளராக யோகி நியமித்துள்ளார். அவரை நியமிக்கும் முன் சந்தித்துப் பேசிய முதல்வர் தனது மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். விஜேந்திரன் பாண்டியன் தமிழ்நாட்டின் சிவகங்கையை சேர்ந்தவர். இவர் 2008 ஆம் வருட ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நாளை முதல் கோரக்பூர் மாவட்ட ஆட்சியாளராக விஜயேந்திர பாண்டியன் பொறுப்பேற்கிறார்.