“தமிழரை காக்க ரசிகர் படையுடன் பெங்களூரு செல்வேன்!”: ரஜினி ஆவேசம்

Must read

ரவுண்ட்ஸ்பாய்:
kuselan_012
லைப்பை படிச்சு அசந்துட்டீங்களா.. அட உண்மைதானுங்க.  சூப்பர் ஸ்டார் ரஜினி இன்னும் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா. “ சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த, நடந்துகொண்டு இருக்கிற நிகழ்ச்சிகளை கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.  இதை தீவிரமாக நான் கண்டிக்கிறேன்.கர்நாடக மக்கள் ஈவு இரக்கமின்றி ராட்சதர்களாக ஆவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை…” அப்படின்னு ஆரம்பிக்குது தலைவர் ரஜினியோட அறிக்கை.
அப்புறம், “… தமிழக மக்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் ஓர் வேண்டுகோள். தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம்.அப்படி ஈடுபட்டால்..அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
ஆனால்..
இச்சூழ்நிலை இப்படியே தொடருமானால்…இந்த தளபதி ரஜினிகாந்த் முன்னிலையில் ஒரு படை தமிழ்நாட்டிலிருந்து புறப்படும். கர்நாடகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழன் வீட்டிற்கு முன்னாலும் என்னுடைய படை வீரர்கள், நூறு நூறு பேர் பாதுகாப்பாக நிற்பார்கள்.அதற்கு என் ரசிகர்கள் என்றென்றும் தயாராக இருக்க கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று முடிகிறது.
rajini-1
சமீபத்தில ரஜினி ஏதும் அறிக்கை விடலியேனு யோசிக்கிறீங்களா.. இது 1992ம் வருசம் டிசம்பர் மாசம் 30ம்தேதி அன்னார் விட்ட அறிக்கை.
ஆனா அப்படி படையெடுத்து அவரு புறப்படலை. தவிர, அதுக்கப்புறம் அப்படி அறிக்கைகூட கொடுக்கலை.
ஆனா இன்னொன்னு நடந்துச்சு.
aa
அவரு நடிச்ச குசேலன் படம் வெளியானப்போ, இதே மாதிரி காவிரி பிரச்சினை வெடிச்சுது. தமிழ்நாட்டுக்கு ஆதரவா ஏதோ… லைட்டா சொல்லிட்டாரு. உடனே, “ரஜினி நடிச்ச குசேலன் படத்தை கர்நாடகத்துல வெளியிட விடமாட்டோம்”னு சில அமைப்புகள் சொல்லிடுச்சு.
ஆவேசமான ரஜினி என்ன செஞ்சார் தெரியுமா…?
நேரா கர்நாடகாவுக்கு போனார்.. “டங்க் ஸ்லிப் ஆயிடுச்சு. இனி அப்படி நடக்காது”னு மன்னிப்பு கேட்டார். அதோட, “கன்னடத்துக்காக நீங்க போராடுங்க. அதுக்கு நான் உறுதுணையா இருப்பேன்” அப்படின்னு ஆதரவும் கொடுத்தாரு.
இதுவும் வரலாறு.
வரலாறு முக்கியம் மக்கழே…!

More articles

Latest article