சென்னை:

பிரபல தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு திருமணம் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மணமகளை தேடி வருவதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று  திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது.

தனது உறவுக்கார பெண்ணான   மஞ்சு பார்கவிவை, அவர்களது  குல தெய்வம் கோயிலில் இன்று காலை திருமணம் செய்துள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருமணம் நிறைவடைந்தது குறித்தும், மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி குறித்தும் தெரிவித்துள்ளார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

யோகி பாபுவுக்கு திருமணம் நடைபெற்ற செய்தி அறிந்ததும் டுவிட்டரில் #YogiBabu என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. வரும் மார்ச் மாதம் சென்னையில், சினிமா பிரபலங்கள் பங்கு பெறும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

யோகி பாபு தனது திருமணம் குறித்த அறிவிப்பை திருமண புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்தார்.

அதற்கு கீழே கமெண்ட் பாக்ஸில் நடிகை கஸ்தூரி யோகி பாபுவுக்கு தனது திருமண வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். யோகி பாபுவின் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.