சென்னை: ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம், ஆனா வடநாட்டுக்கு ஒருத்திக்கு 15 பேர் வரை இருப்பார்கள் என திமுக அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.
திமுக கொண்டாடும் பெரியார் இரு மணங்களை முடித்த நிலையில், மறைந்த திமுக தலைவரான முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 பெண்கள் திருமணம் செய்து, 3 மனைவிகளை வைத்திருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பேச்சு அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காமல் இருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் இடையே வாக்குவாதம் வலுத்து வருகிறது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்.பிக்களை மத்திய அமைச்சர் நாகரிகமற்றவர்கள் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவர் அந்த வார்த்தையை திரும்ப பெற்றார், எனினும் அவரை கண்டித்து திமுக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, திமுக தரப்பில், கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், வேலூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி திமுக அமைச்சர் துரைமுருகன், “ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம். ஆனால் வடநாட்டவன் அப்படியல்ல. அங்கு 5 பேர் இருந்தாலும், 10 பேர் இருந்தாலும் ஒருத்தியையே திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவன் போய்விட்டால் மற்றொருவன் வருவான். இந்த நாற்றமெடுத்த நாகரிகம்தான் உங்களுடையது. தமிழனை தவறாக பேசினால் நாக்கை அறுத்துவிடுவான், ஜாக்கிரதை” என பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்துள்ளனர். ஏற்கனவே திமுக கொண்டாடும் பெரியார் இரு மணம் முடித்தவர்தான். ஏன் முதல்வர் ஸ்டாலின் தந்தையான மறைந்த முதல்வர் கருணாநிதி மூன்று பேரை ( பத்மாவதி அம்மாள், தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள்) மணம் முடித்தவர்தான். அதுபோல இஸ்லாமியர்களும், பல தான மணத்தை வரவேற்பவர்கள். ஒரு பெண் பிடிக்கவில்லை என்றே அவரை தலாக் செய்துவிட்டு, உடனே மறுமணம் செய்துவார்கள். இது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பேச்சு மக்களிடையே மட்டுமின்றி திமுகவினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. துரைமுருகன் யார் மீதுள்ள கடுப்பில் இவ்வாறு பேசினார் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி வருகிறது. தமிழனின் நாகரிகத்துக்கு மாறாக தமிழ்நாடு அரசியல்வாதிகள் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.