சென்னை: எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் வணிகரின் பெயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, தமிழர் நாகரிகம் என்பதற்கு மற்றுமொரு சாட்சி என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் – பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து தமிழ்-பிராமி, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்ட 30 கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடான எகிப்துக்கும் இடையிலான பண்டைய வர்த்தக தொடர்புகளுக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
6 கல்லறைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியிலும் உள்ளதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எகிப்துக்கு, அதன் பண்டைய தலைநகரான தீபஸுக்குள் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்குக்கு கி.பி 1 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மசாலாப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களை வர்த்தகம் செய்வதற்காகச் சென்றதாகக் குறிக்கிறது.
தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை ஏற்பாடு செய்த தமிழ் கல்வெட்டு குறித்த சர்வதேச மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்சின் பாரிஸில் உள்ள பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டனர். ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட’ (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது. ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது.
20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் எழுத்துக்கள் பொறி பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுப்பு. இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் உள்ளன. ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் – வர கண்ட’ (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது.
ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகும்.
இதையொட்டி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது. எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழ்-பிராமி கல்வெட்டுகள், ‘சிகை கொற்றன்’ என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது.
ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]