ஊரடங்கு காரணமாக ஏழு மாதங்களாக சினிமா படப்பிடிப்பு நடக்கவில்லை.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஒரு சில படங்களின் ஷுட்டிங் மட்டுமே நடைபெறுகிறது.
இதனால் பல நடிகர்- நடிகைகள் ‘வெப்’ தொடரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..
இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர்- நடிகை தமன்னா. அவர் “11 TH HOUR” என்ற தெலுங்கு ‘வெப்’ தொடரில் இப்போது நடித்து வருகிறார்.
அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் வெப் தொடர் இது. ‘8 HOURS’ என்ற நாவலை தழுவி இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது..
பிரவீன் சாத்தரு என்பவர் இயக்கும் இந்த வெப் தொடரின் “லோகோ” மற்றும் தமன்னாவின் முதல் தோற்றம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய தமன்னா “ஊரடங்கில் நான் கேட்ட முதல் கதை இது. ஸ்கிரிட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டேன். கொரோனா முற்றிலும் விலகாத நிலையில் நடிப்பது எளிதல்ல என்றாலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடிப்பதால் பிரச்சினை இல்லை” என்று தெரிவித்தார்.
தமன்னா தற்போது விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் “சீத்மார்” உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
– பா. பாரதி