காபுல்

காபுல் நகரை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றினர்.  கடந்த 2001 ஆம் வருடம் அவர்களை அமெரிக்க ராணுவம் விரட்டி அடித்தது.  பிறகு ஜனநாயக ஆட்சி நடந்து வரும் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ராணுவம் முழுமையாக இம்மாத இறுதியில் வெளியேற உள்ளன

எனவே ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தாலிபான்கள் இறங்கினர்.  சென்ற மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் சண்டையில் தாலிபான்கள் சிறிது சிறிதாக முன்னேறி மூன்றே வாரங்களில் 13 மாகாணங்களை கைப்பற்றியது.

தாலிபான்கள் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பல மாகாண தலைநகரங்களைஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றி வந்தனர்.  இந்நிலையில் அந்நாட்டுத் தலைநகர் காபூலுக்குள் அனைத்து திசைகளிலும் இருந்தும் நுழைந்தனர்.  அரசு அலுவலகங்களில் இருந்த அலுவலர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

காபூல் நகரம் முழுவதும் தாலிபான்கள் வசமானது.  இதையொட்டி அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி காபூல் நகரை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அத்துடன் இடைக்கால அரசின் அதிபராக அலி அகமது ஜவாலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.