காபூல்

காபூலில் உள்ள அனைத்து தூதரகங்களும் பாதுகாப்புடன் செயல்பட தாலிபான்கள் உதவ  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாலிபான்கள் காபூல் நகரைப் பிடித்ததை ஒட்டி பல நாடுகள் தங்களின் தூதரகங்களை மூடி உள்ளன.  மேலும் தாலிபான்கள் இஸ்லாமிய அடிப்படை வாதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதால் பெண்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.  இந்நிலையில் தாலிபான்கள் செய்தி தொடர்பாளர்  ஜபிஹுல்லா முஜாஹித் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே அனைத்து தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எங்கள் படைகள் உள்ளன.  இதன் மூலம் அனைத்து வெளிநாடுகளுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்

மேலும் இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தாலிபான் உறுதி பூண்டுள்ளது. சுகாதாரத் துறையிலும் அவர்களுக்குத் தேவைப்படும் பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். நிச்சயமாகப் பெண்களுக்கு எதிராக பாகுபாடு இருக்காது” என்று அறிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]