தாலிபன் தாக்குதல் : ஆஃப்கான் செக் போஸ்டில் 10 போலீசார் மரணம்

 

இந்திய – ஆஃப்கான் நட்புறவு அணை, இதன் அருகில் தான் தாக்குதல் நடந்தது

காபூல்

தாலிபன்கள் சல்மா அணை (இந்தியா உதவியுடன் கட்டப்பட்டது) அருகே ஒரு செக் போஸ்டில் நடத்திய தாக்குதலில் 10 போலிசார் கொல்லப்பட்டனர்

சல்மா அணை என அழைக்கப்படும் இந்திய – ஆஃப்கான் நட்பு அணையின் அருகே ஒரு போலீஸ் செக்போஸ்ட் உள்ளது.  அதன்வழியாக பயணித்த ஒரு வாகனத்தில் தாலிபன் தீவிரவாதிகள் இருந்தனர்.   செக்போஸ்டில் அவர்களின் வாகனத்தை சோதனையிடும் போது அவர்கள் காவலர்களை துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு காவலர்களும் சுட, இந்த சண்டையில் 10 போலிசார் சுடப்பட்டு இறந்தனர்.   தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.

இந்த தகவலை வெளியிட்ட ஆஃப்கன் அரசு,  தாலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.    உடனடியாக பேச்சு வார்த்தைக்கு வந்து அமைதி வழிக்கு திரும்பாவிட்டால், அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என அச்சுறுத்தியுள்ளது


English Summary
Taliban attacked police check post near indo afghan friendship dam and killed 10 policeman